பாடல் 1233
கன்னியர் கடுவிட மன்னிய கயலன
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தன்னன தனதன தன்னன தனதனதன்னன தனதனதனதான
பாடல் வரிகள்
கன்னியர் கடுவிட மன்னிய கயலனகண்ணிலு மிருகனதனமீதுங்
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலிமென்மைகொ ளுருவிலுமயலாகி
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினிலிந்நிலை பெறவிஙனுதியாதே
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசையென்னையும் வழிபடவிடவேணும்
பொன்னவ மணிபயில் மன்னவ புனமறமின்முலை தழுவியபுயவீரா
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்எண்மலை யொடுபொருகதிர்வேலா
தன்னிறை சடையிறை யென்முனி பரவருஇன்னிசை யுறுதமிழ்தெரிவோனே
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்சண்முக மழகியபெருமாளே.
