பாடல் 1207
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தத்தனா தனத்த தத்தனாதனத்த தத்தனாதனதான
பாடல் வரிகள்
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்பசைத்து வக்குமாலிளைஞோரை
அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீதணைத்து மெத்தமாலதுகூர
உ ருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநாவுலற்றி யுட்குநாணுடன்மேவி
உ ழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபாலுறக்கு ணத்ததாளருள்வாயே
சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடாதொருத்தர் மிக்கமாநடமாடுஞ்
சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்சுரக்க வித்தைதானருள்வோனே
பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்பிடித்து குற்றமாரொருசூரன்
பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்பிழைக்க விட்டவோர்பெருமாளே.
