பாடல் 1181
பூசல் வந்திரு தோடார் காதொடு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் -தான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதான தந்தன தானா தானனதனதான
பாடல் வரிகள்
பூசல் வந்திரு தோடார் காதொடுமோதி டுங்கயல் மானார் மானமில்போக மங்கையர் கோடா கோடியமனதானார்
பூர குங்கும தூளா மோதபடீர சண்பக மாலா லாளிதபூத ரங்களின் மீதே மூழ்கியஅநுராக
ஆசை யென்கிற பாரா வாரமுமேறு கின்றில னானா பேதஅநேக தந்த்ரக்ரியாவே தாகமகலையாய
ஆழி யுங்கரை காணே னூபுரபாத பங்கய மோதே னேசிலனாயி னுங்குரு நாதா நீயருள்புரிவாயே
வாச வன்பதி பாழா காமல்நிசாச ரன்குலம் வாழா தேயடிமாள வன்கிரிகூறாய் நீறெழநெடுநேமி
மாத வன்தரு வேதா வோடலைமோது தெண்கடல் கோகோ கோவெனமாமு றிந்திட நீள்வே லேவிய ....... ; ளையோனே
வீசு தென்றலும் வேள்பூ வாளியுமீறு கின்றமை யாமோ காமவிடாய்கெ டும்படி காவா யாவியையெனஏனல்
மீது சென்றுற வாடா வேடுவர்பேதை கொங்கையின் மீதே மால்கொடுவேடை கொண்டபி ரானே வானவர்பெருமாளே.
