பாடல் 1177
புகரில் சேவல தந்துர சங்க்ரம
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- மலய மாருதம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனதான
பாடல் வரிகள்
புகரில் சேவல தந்துர சங்க்ரமநிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரிபொருத சேவக குன்றவர் பெண்கொடிமணவாளா
புனித பூசுர ருஞ்சுர ரும்பணிபுயச பூதர என்றிரு கண்புனல்பொழிய மீமிசை யன்புது ளும்பியமனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்மருவு மாருயி ருங்கர ணங்களுமவிழ யானுமி ழந்தஇ டந்தனிலுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்அடைய ஆமென அன்றென நின்றதையறிவி லேனறி யும்படி யின்றருள்புரிவாயே
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்மலய மாருத மும்பல வெம்பரிமளசி லீமுக மும்பல மஞ்சரிவெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கரமதுர கார்முக மும்பொர வந்தெழுமதன ராஜனை வெந்துவி ழும்படிமுனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களுமுதுப கீரதி யும்புனை யுஞ்சடைமுடியர் வேதமு நின்றும ணங்கமழ்அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரிகிரிகு மாரித்ரியம்பகி தந்தருள்முருக னேசுர குஞ்சரிரஞ்சிதபெருமாளே.
