உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1165

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனனதன தான தான தனனதன தான தானதனனதன தான தானதனதான

பாடல் வரிகள்

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்புநடுசிகர மாகி வாய்வகரமாகி

நதிமுடிய சார மாகி உ தயதிரு மேனி யாகிநவசிவய மாமை யாகிஎழுதான

அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்அறிவிலறி வான பூரணமுமாகும்

அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகிமருவுமவ தான போதம்அருள்வாயே

குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரிகுறையகல வேலை மீதுதனியூருங்

குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறுகுலவுதிரை சேரு மாதுதனைநாடி

அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவிஅரியமண மேசெய் தேகவலைதேடி

அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்அசபைசெகர் சோதி நாதபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →