உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1163

நடை - தகதகிட

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை (35)(எடுப்பு - /4/4/4 0)

பாடல் வரிகள்

நடை - தகதகிட

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தனதனன தனதனன தந்தனந் தந்தனந்தனதான

தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன்பதுவாயுந்

தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின்வசமாகித்

திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும்அயர்வாகிச்

செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங்கழல்தாராய்

செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின்மகிழ்வாகிச்

சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந்தவமோதச்

சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்சிறைவை஢ட வருமுருக என்றுவந் திந்திரன்சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங்கதிர்வேலா

சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்தெரிவரிய முடியினர வங்ளுந் திங்களுஞ்சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →