பாடல் 1154
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத்தனதன தனனத் தனனத்தனதான
பாடல் வரிகள்
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்கொடியிடை துவளத் துவளத்தனபாரக்
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்குயில்மொழி பதறப் பதறப்ப்ரியமோகக்
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக்கரமொடு தழுவித் தழுவிச்சிலநாளிற்
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக்கடியொரு செயலுற் றுலகிற்றிரிவேனோ
சலநிதி சுவறச் சவறத் திசைநிலை பெயரப் பெயரத்தடவரை பிதிரப் பிதிரத்திடமேருத்
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்சமனுடல் கிழியக் கிழியப்பொருசூரன்
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்பிறநரிதொடரத் தொடரத்திரள்கூகை
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்ப்ரபையயில் தொடுநற் குமரப்பெருமாளே.
