பாடல் 1149
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதன தத்தாத் தானனதனதன தனதன தத்தாத் தானனதனதன தனதன தத்தாத் தானனதந்ததான
பாடல் வரிகள்
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்பதறிய சமயிக ளெட்டாப் பேரொளிகருவற இருவினை கெட்டாற் காண்வருமென்றஏகங்
கருகிய வினைமன துட்டாக் காததுசுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வதுகசடற முழுதையும் விட்டாற் சேர்வதுணர்ந்திடாதே
விதமது கரமுரல் மொட்டாற் சாடியரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்வினைபுரிபவரிடு முற்றாச் சாலிருபுண்டாணக
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முகநுதலெழு தியசிறு பொட்டாற் சாயகவிரகுடை விழிவலை பட்டாற் றாதுநலங்கலாமோ
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலகசுருதிக ளடிதொழ எட்டாத் தேசிகபருகென வனமுலை கிட்டாத் தாரகைதந்துநாளும்
பரிவுற வெகுமுக நெட்டாற் றுடொருபடுகையி னிடைபுழு வெட்டாப் பாசடைபடர்வன பரிமள முட்டாட் டாமரைதங்கிவாழுஞ்
சததள அமளியை விட்டாற் றேறியசலநிதி குறுகிட வொட்டாச் சூரொடுதமனிய குலகிரிபொட்டாய்த் தூளெழவென்றகோவே
தழைதரு குழைதரு பட்டாட் சாலவுமழகிய கலவிதெ விட்டாக் காதலிதலைமக நிலமடி தட்டாத் தேவர்கள்தம்பிரானே.
