உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 114

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

தலம்
பழநி
தாளம்
கண்டசாபு (2 1/2)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானதன தானதன தானதன தானதனதானதன தானதனதந்ததான

பாடல் வரிகள்

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்ஆறுமுகம் ஆறுமுகம்என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடியார்கள்பத மேதுணையதென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனதுஈசஎன மானமுனதென்றுமோதும்

ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுனையேவர்புகழ் வார்மறையுமென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணிநீலமயில் வாகவுமைதந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடியநீடுதனி வேல்விடுமடங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுகதேவர்துணை வாசிகரிஅண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரமதேவர்வர தாமுருகதம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →