பாடல் 1112
(எடுப்பு - 3/4 இடம்)
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஹிந்தோளம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமிதக-3, தகிட-1 1/2
பாடல் வரிகள்
(எடுப்பு - 3/4 இடம்)
தத்ததனா தான தத்ததனா தானதத்ததனா தானதனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சாரதுக்கமிலா ஞானசுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குண்மு டாடுசுத்தநிரா தாரவெளிகாண
மொட்டலர்வா ணச சக்ரசடா தாரமுட்டவுமீ தேறிமதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றானமுத்திரையா மோனமடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெனப்பிரமா வோடவரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாயஎத்தனையோ கோடியசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவுபத்திருதோள் வீரதினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமம றாதுபத்திசெய்வா னாடர்பெருமாளே.
