பாடல் 1110
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்ததன தானான தத்ததன தானானதத்ததன தானானதனதான
பாடல் வரிகள்
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்பத்தியுடன் மேல்மூடியினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடைபற்றியணை வோர்கூவியலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறுபொற்றியிட வேயாவிபிரியாமுன்
பொற்கழலை நாடோ று முட்பரிவி னாலோதுபுத்திநெடி தாம்வாழ்வுபுரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்எப்பொருளு மாமீசர்பெருவாழ்வே
எட்டவரிதோர்வேலை வற்றமுது சூர்மாளஎட்டியெதி ரேயேறுமிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழமத்தமயில் மீதேறிவருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழவைத்தபடி மாறாதபெருமாளே.
