பாடல் 1073
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்த தானந் தந்தன தனதனதனதான
பாடல் வரிகள்
கலந்த மாதுங் கண்களி யுறவருபுதல்வோருங்
கலங்கி டாரென் றின்பமு றுலகிடைகலிமேவி
உ லந்த காயங் கொண்டுள முறுதுயருடன்மேவா
உ கந்த பாதந் தந்துனை யுரைசெயஅருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரிமருகோனே
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவியமணவாளா
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும்ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையு மழகியபெருமாளே.
