உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1062

வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தாத்தன தனன தாத்தனதானா தானா தானா தானாதனதான

பாடல் வரிகள்

வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்வாளோ வேலோ சேலோ மானோஎனுமாதர்

மனது போற்கரு கினகு வாற்குழல்வானோ கானோ மாயா மாயோன்வடிவேயோ

பருகு பாற்கடல் முருகு தேக்கியபாலோ தேனோ பாகோ வானோரமுதேயோ

பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவிபாடா நாயே னீடே றாதேயொழிவேனோ

அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோவெனஏகி

அவுணர் கூப்பிட வுததி தீப்படஆகா சூரா போகா தேமீளெனவோடிக்

குருகு பேர்க்கிரியுருவ வோச்சியகூர்வே லாலே யோர்வா ளாலேஅமராடிக்

குலிச பார்த்திப னுலகு காத்தருள்கோவே தேவே வேளே வானோர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →