பாடல் 1054
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடுகுடிசை கோழை மாசூறுகுழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதாரகுறடு பாறு நாய்கூளிபலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்படியின் மூழ்கி யேபோதுதளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை யாளர் காணாதபரம ஞான வீடேதுபுகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வானஇமய மாது மாசூலிதருபாலா
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்இசைக ளோடு பாராடமகிழ்வோனே
அரவி னோடு மாமேரு மகர வாரிபூலோகமதிர நாக மோரேழுபொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாடஅசுரர் மாள வேலேவுபெருமாளே.
