பாடல் 1042
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
பாடல் வரிகள்
வாராய் பேதாய் கேளாய் நீதாய்மானார் மோகத்துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்மாறா ஞானச்சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்ஆனா வேதப்பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீதார்வே றாள்கைக்குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாராசூரா சாரற்புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்தூளாய் வீழச்சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவேலாலே சேதித்திடும்வீரா
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
