பாடல் 1032
காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தான தனத்தம் தான தான தனத்தம்தான தான தனத்தம்தனதான
பாடல் வரிகள்
காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங்காதல் பேணு நுதற்குங்கதிர்போலுங்
காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங்காசு பூணு முலைக்குங்கதிசேரா
நேரிதான இடைக்குஞ் சீத வார நகைக்கும்நேரிலாத தொடைக்குஞ்சதிபாடும்
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்னேய மோடு துதிக்கும்படிபாராய்
பார மேரு வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்பாதி சோம னெருக்கும்புனைவார்தம்
பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்பாவ நாச மறுத்தின்பதமீவாய்
சோரிவாரியிடச்சென் றேறி யோடி யழற்கண்சூல காளி நடிக்கும்படிவேலாற்
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்தோகை வாசி நடத்தும்பெருமாளே.
