பாடல் 982
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
- தலம்
- உ த்தரகோசமங்கை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தன தானத் தனதன தந்தத்தத்தன தானத் தனதன தந்தத்தத்தன தானத் தனதன தந்தத்தனதான
பாடல் வரிகள்
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்திற்புத சேனைக் கதிபதி யின்பக்கட்கழை பாகப் பமமுது வெண்சர்க்கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்றொப்பையி னேறிட் டருளிய தந்திக்கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப்பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்பொற்சரி நாதப் பரிபுர என்றுப்பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித்தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்றுப்புக லாகத் தமுதையு முண்டிட்டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற்செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்தத்தன தானத் தடுடுடு வென்கச்செப்பறை தாளத் தகுதொகு வென்கச்சிலபேரி
உ ற்பன மாகத் தடிபடு சம்பத்தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத்தொடுவேலா
உ ட்பொருள் ஞானக் குறமக ளும்பற்சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்றுத்தர கோசத் தலமுறை கந்தப்பெருமாளே.
