உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 979

கருப்புச் சாப னனைய இளைஞர்கள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தத் தான தனன தனதனதனத்தத் தான தனன தனதனதனத்தத் தான தனன தனதனதனதான

பாடல் வரிகள்

கருப்புச் சாப னனைய இளைஞர்கள்ப்ரமிக்கக் காத லுலவு நெடுகியகடைக்கட் பார்வை யினிய வனிதையர்தனபாரங்

களிற்றுக் கோடு கலச மலிநவமணிச்செப் போடை வனச நறுமலர்கனத்துப் பாளை முறிய வருநிகரிளநீர்போற்

பொருப்பைச் சாடும் வலியை யுடையனஅறச்சற் றான இடையை நலிவனபுதுக்கச் சார வடமொ டடர்வனஎனநாளும்

புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர்ப்ரியப்பட் டாள வுரைசெ யிழிதொழில்பொகட்டெப் போது சரியை கிரியைசெய்துயிர்வாழ்வேன்

இருட்டுப் பாரில் மறலி தனதுடல்பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழஎயிற்றுப் போவி யமர ருடலவர்தலைமாலை

எலுப்புக் கோவை யணியு மவர்மிகஅதிர்த்துக் காளி வெருவ நொடியினில்எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர்நவநீத

திருட்டுப் பாணி யிடப முதுகிடைசமுக்கிட் டேறி யதிர வருபவர்செலுத்துப் பூத மலகை யிலகியபடையாளி

செடைக்குட் பூளை மதிய மிதழிவெளெருக்குச் சூடி குமர வயலியல்திருப்புத் தூரில் மருவி யுறைதருபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →