பாடல் 973
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
- தலம்
- இலஞ்சி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்த தனந்த தனந்த தனந்ததனந்த தணந்ததனதானா
பாடல் வரிகள்
சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டுதுரந்தெறி கின்றவிழிவேலால்
சுழன்று சுழன்று துவண்டு துவண்டுசுருண்டு மயங்கிமடவார்தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்துமெலிந்து தளர்ந்துமடியாதே
விளங்கு கடம்பு விழைந்தணி தண்டைவிதங்கொள் சதங்கையடிதாராய்
பொருந்த லமைந்து சிதம்பெற நின்றபொலங்கிரி யொன்றையெறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்புரந்தரன் வஞ்சிமணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்குரும்பை மணந்தமணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்றுஇலஞ்சி யமர்ந்தபெருமாளே.
