உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 971

கரங்க மலமின தரம்ப வளம்வளை

தலம்
இலஞ்சி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனந்த தனதன தனந்த தனதனதனந்த தனதனதனதான

பாடல் வரிகள்

கரங்க மலமின தரம்ப வளம்வளைகளம்ப கழிவிழிமொழிபாகு

கரும்ப முதுமலை குரும்பை குருகுபகரும்பி டியினடையெயின்மாதோ

டரங்க நககன தனங்கு தலையிசையலங்க நியமுறமயில்மீதே

அமர்ந்து பவவினை களைந்து வருகொடியவந்த கனகலவருவாயே

தரங்க முதியம கரம்பொ ருததிரைசலந்தி நதிகுமரெனவான

தலம்ப ரவ மறை புலம்ப வருசிறுசதங்கை யடிதொழுபவராழி

இரங்கு தொலைதிரு வரங்கர் மருகபனிரண்டு புயமலைகிழவோனே

இலங்கு தரதமிழ் விளங்க வருதிருஇலஞ்சி மருவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →