பாடல் 934
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதிதனதன தானத் தனதன தானத்தனதன தானத்தனதான
பாடல் வரிகள்
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்சிலைபொரு காலுற்றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்குழல்தனி யோசைத்தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்தனிமிக வாடித்தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்தருள்முரு காவுற்றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்தொடுகும ராமுத்தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்திருவளர் சேலத்தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்தனிமயி லேறித்திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்கிளையவி நோதப்பெருமாளே.
