உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 928

சஞ்சல சரித பரநாட்டர்கள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தன தனன தனதாத்தனதந்தன தனன தனதாத்தனதந்தன தனன தனதாத்தனதனதான

பாடல் வரிகள்

சஞ்சல சரித பரநாட்டர்கள்மந்திரி குமரர் படையாட்சிகள்சங்கட மகிபர் தொழஆக்கினைமுடிசூடித்

தண்டிகை களிறு பரிமேற்றனிவெண்குடை நிழலி லுலவாக்கனசம்ப்ரம விபவ சவுபாக்கியமுடையோராய்க்

குஞ்சமும் விசிற இறுமாப்பொடுபஞ்சணை மிசையி லிசையாத்திரள்கொம்புகள் குழல்கள் வெகுவாத்தியமியல்கீதங்

கொங்கணி மகளிர் பெருநாட்டியநன்றென மனது மகிழ்பார்த்திபர்கொண்டய னெழுதும் யமகோட்டியையுணராரே

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்வென்றிட சகுனி கவறாற்பொருள்பங்குடை யவனி பதிதோற்றிடஅயலேபோய்ப்

பண்டையில் விதியை நினையாப்பனிரண்டுடை வருக்ஷ முறையாப்பலபண்புடன் மறைவின் முறையாற்றிருவருளாலே

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்முந்துத முடைய மனைவாழ்க்கையின்வந்தபி னுரிமை யதுகேட்டிடஇசையாநாள்

மண்கொள விசையன் விடுதேர்ப்பரியுந்தினன் மருக வயலு¡ர்க்குகவஞ்சியி லமரர் சிறைமீட்டருள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →