பாடல் 906
கமலத் தேகு லாவு மரிவையை
- தலம்
- வயலு¡ர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனத் தான தான தனதனதனனத் தான தான தனதனதனனத் தான தான தனதனதனதான
பாடல் வரிகள்
கமலத் தேகு லாவு மரிவையைநிகர்பொற் கோல மாதர் மருள்தருகலகக் காம நூலை முழுதுணரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரிமளகற் பூர தூம கனதனகலகத் தாலும் வானி னழையுமினிடையாலும்
விமலச் சோதி ரூப இமகரவதனத் தாலு நாத முதலியவிரவுற் றாறு கால்கள் சுழலிருள்குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளைஅணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்விழியிற் பார்வை யாலு மினியிடர்படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணிகனகத் தேர்கள் யானை யவுணர்கள்தகரக் கூர்கொள் வேலை விடுதிறலு§வோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்புகழக் கானி லாடு பரிபுரசரணத் தேக வீர அமைமனமகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதிமகள்மெய்த் தோயு நாத குறமகள்அணையச் சூழ நீத கரமிசையுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதிதிருவக் கீசன் வாழும் வயலியின்அழகுக் கோயில் மீதில மருவியபெருமாளே.
