பாடல் 905
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
- தலம்
- வயலு¡ர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனாத் தனதன தனனாத் தனதனதனனாத் தனதனதனதான
பாடல் வரிகள்
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்கனிபோற் றுகிரிதழ்எழிலாகும்
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடைகடிபோற் பணியரையெனவாகும்
உ டல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவளுடையாற் கெறுவிதநடையாலும்
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்ஒழியாத் துயரதுதவிரேனோ
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரிகொளிவாய்ப் பலஅலகைகள்பேய்கள்
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்குடியேற் றியகுகவுயர்தாழை
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறிவயலு¡ர்ப் பதிதனிலுறைவோனே
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடைமகள்மேற் ப்ரியமுளபெருமாளே.
