உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 903

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான

பாடல் வரிகள்

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்எயிறு கடிபடு முதடிகள் பதடிகள்எவரோடும்

இனிய நயமொழி பழகிக ளழகிகள்மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்யமனு மிகையென வழிதரு முழிதரும்விழிவாளால்

உ லக மிடர்செயு நடலிகள் மடலிகள்சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்உ றவு சொலவல துரகிகள் விரகிகள்பிறைபோலே

உ கிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்பகடி யிடவல கபடிகள் முகடிகள்உ ணர்வு கெடும்வகை பருவிக ளுருவிகளுறவாமோ

அலகை புடைபட வருவன பொருவனகலக கணநிரை நகுவன தகவனஅசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வனபொடியாடி

அலரி குடதிசை யடைவன குடைவனதரும வநிதையு மகிழ்வன புகழ்வனஅகில புவனமு மரகர கரவெனஅமர்வேள்வி

திலக நுதலுமை பணிவரு செயமகள்கலையி னடமிட வெரிவிரி முடியினர்திரள்ப லுயிருடல் குவடுக ளெனநடமயிலேறிச்

சிறிது பொழுதினி லயில்விடு குருபரஅறிவு நெறியுள அறுமுக இறையவத்ரிசிரி கிரியயல் வயலியி லினிதுறைபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →