பாடல் 900
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)(எடுப்பு - 1/2 இடம்)தனதன தானான தானந் தனதன தானான தானந்தனதன தானான தானந்தனதான
பாடல் வரிகள்
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்றறுமுக வேளே நமோவென்றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்றருண செர்ருபா நமோவென்றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்பகைமயில் வேலா யுதாடம்பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்பதிபசு பாசோப தேசம்பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்கடினசு ராபான சாமுண்டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்களமிசை தானேறி யேயஞ்சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்குடல்கொள வேபூச லாடும்பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்குளிர்வய லு¡ரார மேவும்பெருமாளே.
