பாடல் 899
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
- தலம்
- திருமாந்துறை
- ராகம்
- ஆஹிரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதிதாந்தன தனந்த தாந்தன தனந்ததாந்தன தனந்ததனதான
பாடல் வரிகள்
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்துஆய்ஞ்சுதளர் சிந்தைதடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்துஆண்டுபல சென்றுகிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்துஓய்ந்துணர் வழிந்துஉ யிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்துஊன்றிய பதங்கள்தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்தவேந்திழையி னின்பமணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்சவேண்டிய பதங்கள்புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்துமாண்புநெல் விளைந்தவளநாடா
மாந்தர்வ ரும்பர் கோன்பரவி நின்றமாந்துறை யமர்ந்தபெருமாளே.
