உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 885

கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து

தலம்
தஞ்சை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்த தானன தான தான தத்த தந்ததந்த தானன தான தான தத்த தந்ததந்த தானன தான தான தத்த தந்ததனதான

பாடல் வரிகள்

கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்துமஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்துகண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்துதெருவூடே

கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்துவண்ப யோதர பார மேரு வைத்தி றந்துகண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்துவிலைகூறி

வந்த பேர்களை யேகை யாலே டுத்த ணைந்துகொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்திமந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்துமயல்பூணு

மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்துவண்டு லாவிய நீப மாலை சற்றி லங்கவருவாயே

இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்தசங்க பாணிய னாதி கேச வப்ர சங்கனென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன்மருகோனே

எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டுகந்த தாருக சேனை நீறு பட்டொ துங்கவென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்குகதிர்வேலா

சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்டமுண்ட நாரணி யால போஜ னத்தி யம்பைதந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சுமணிமார்பா

சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்துகஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்ததஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →