பாடல் 877
தோடுற்றுக் காதள வோடிய
- தலம்
- திருப்பழையாறை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதானத்தத் தானன தானனதனதான
பாடல் வரிகள்
தோடுற்றுக் காதள வோடியவேலுக்குத் தானிக ராயெழுசூதத்திற் காமனி ராசதவிழியாலே
சோடுற்றத் தாமரை மாமுகைபோலக்கற் பூரம ளாவியதோல்முத்துக் கோடென வீறியமுலைமானார்
கூடச்சிக் காயவ ரூழியமேபற்றிக் காதலி னோடியகூளச்சித் தாளனை மூளனைவினையேனைக்
கோபித்துத் தாயென நீயொருபோதத்தைப் பேசவ தாலருள்கோடித்துத் தானடி யேனடிபெறவேணும்
வேடிக்கைக் காரவு தாரகுணபத்மத் தாரணி காரணவீரச்சுத் தாமகு டாசமர்அடுதீரா
வேலைக்கட் டாணிம காரதசூரர்க்குச் சூரனை வேல்விடுவேழத்திற் சீரரு ளூறியஇளையோனே
ஆடத்தக் காருமை பாதியர்வேதப்பொற் கோவண வாடையர்ஆலித்துத் தானரு ளூறியமுருகோனே
ஆடப்பொற் கோபுர மேவியஆடிக்கொப் பாமதிள் சூழ்பழையாறைப்பொற் கோயிலின் மேவியபெருமாளே.
