பாடல் 876
மகர குண்டல மீதே மோதுவ
- தலம்
- திருவலஞ்சுழி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தந்தன தானா தானனதனன தந்தன தானா தானனதனன தந்தன தானா தானனதனதான
பாடல் வரிகள்
மகர குண்டல மீதே மோதுவவருண பங்கய மோபூ வோடையில்மருவு செங்கழு நீரோநீவிடுவடிவேலோ
மதன்வி டுங்கணை யோவா ளோசிலகயல்கள் கெண்டைக ளோசே லோகொலைமறலி யென்பவ னோமா னோமதுநுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழுநிலவ ருந்துபு ளோமா தேவருண்முதிய வெங்கடு வோதே மாவடுவகிரோபார்
முடிவெ னுங்கட லோயா தோவெனவுலவுகண்கொடு நேரே சூறைகொள்முறைய றிந்தப சாசே போல்பவருறவாமோ
நிகரில் வஞ்சக மா¡£ சாதிகள்தசமு கன்படை கோடா கோடியநிருத ரும்பட வோரே வேவியெயடுபோர்செய்
நெடிய னங்கனு மானோ டேயெழுபதுவெ ளங்கவி சேனா சேவிதநிருப னம்பரர் கோமான் ராகவன்மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்பிரபை யொன்றுபி ராசா தாதிகள்சிவச டங்கமொ டீசா னாதிகள்சிவமோனார்
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்அயல்வி ளங்குசு வாமீ காமருதிருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள்பெருமாளே.
