பாடல் 868
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
- தலம்
- கும்பகோணம்
- ராகம்
- அஸாவேரி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி(எடுப்பு - 3/4 இடம்)தனத்த தந்தன தனதன தந்தத்தனத்த தந்தன தனதன தந்தத்தனத்த தந்தன தனதன தந்தத்தனதான
பாடல் வரிகள்
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்துருத்த வெண்பலு மடைய விழுந்துட்கருத்து டன்திகழ் மதியு மருண்டுச்சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக்கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச்சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற்றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்புகட்ட ரங்கிய விரக துரங்கத்திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக்கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்பரிச்சு மந்திடு குமர கடம்பத்திருக்கு டந்தையி லுறைதரு கந்தப்பெருமாளே.
