பாடல் 864
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
- தலம்
- கும்பகோணம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்தந்ததனத் தானதனத்தனதான
பாடல் வரிகள்
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்றொந்தமெனப் பாயுமுலைக்கனமாதர்
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்தொங்கல்மயிற் சாயலெனக்குழல்மேவிச்
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்செங்கயலைப் போலும்விழிக்கணையாலே
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்தரமுகப் பாவையர்தித்திந்திதமனுற் றாடுமவர்க்குழல்வேனோ
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்சந்தமயிற் சாய்விலகிச்சிறைபோகச்
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்தங்கநிறத் தாள்சிறையைத்தவிர்மாயோன்
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்கொண்டுவளைத் தேமகிழச்சுதனீண
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்கும்பகொணத் தாறுமுகப்பெருமாளே.
