உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 863

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்தந்ததனத் தானதனத்தனதான

பாடல் வரிகள்

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்டின்பரசப் பாலமுதச்சுவைமேவு

எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்றெந்தைநடித் தாடுமணிச்சபையூடே

கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்கண்டுகளித் தேயமுதக்கடல்மூழ்கிக்

கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்கண்டமதைக் காணஎனக்கருள்வாயே

திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்டிந்தமெனக் காளமணித்தவிலோசை

சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்செண்டுகுலைத் தாடுமணிக்கதிர்வேலா

குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்கொண்டல்நிறத் தோன்மகளைத்தரைமீதே

கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்கும்பகொணத் தாறுமுகப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →