பாடல் 855
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதந்ததான
பாடல் வரிகள்
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகையார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழிசீர்சி றந்தமுக வாரி ளம்பிறையதென்புரூவர்
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகினார்பு யங்கழையி னார்த னங்குவடுசேர்சி வந்தவடி வார்து வண்டஇடைபுண்டா£கம்
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடையார்ச ரண்கமல நேரி ளம்பருவதோகை சந்தமணி வாரு டன்கலவியின்ப்முடே
சோக முண்டுவிளை யாடி னுங்கமலபாத மும்புயமி ராறு மிந்துளபல்தோட லங்கலணி மார்ப மும்பரிவுளங்கொள்வேனே
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுகநீலி கண்டிகலி யாணி விந்துவொளியோசை தங்குமபி ராமி யம்பிகைபயந்தவேளே
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்சேறு டன்குருதி யோட எண்டிசையும்ஓது கெந்தருவர் பாட நின்றுநடனங்கொள்வேலா
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையெனதாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுறமானொ டும்பர்தரு மான ணைந்தழகிலங்குமார்பா
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதியாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்ஈறில் பந்தணைந லு¡ர மர்ந்துவளர்தம்பிரானே.
