பாடல் 854
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்ததன தந்ததன தனதனத்தந்ததன தந்ததன தனதனத்தந்ததன தந்ததன தனதனத்தனதான
பாடல் வரிகள்
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற்கொடுபோய்வண்
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்தின்பவச னந்தருந் தொழிலடுக்கின்றமய லின்படுந் துயரறப்ப்ரபைவீசுந்
தண்டைகள் கலின்கலின் கலினெனக்கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்தண்கொலு சுடன்சிலம் பசையவுட்பரிவாகிச்
சந்ததமும் வந்திரும் பரிமளப்பங்கய பதங்களென் கொடுவினைச்சஞ்சல மலங்கெடும் படியருட்புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரணெனக்கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத்துந்துமி திமிந்திமிந் திமினெனக்குறுமோசை
சுந்தரி மணஞ்செயுஞ் சவுரியக்கந்தகுற வஞ்சிதங் கருவனத்துங்கமலை யும்புரந் தமரருக்கிடர்கூரும்
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்பைந்தருவ னம்புரந் தகழெயிற்புடைசூழும்
பந்திவரு மந்திசெண் பகமகிற்சந்துசெறி கொன்றைதுன் றியவனப்பந்தணையில் வந்திடுஞ் சரவணப்பெருமாளே.
