உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 853

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தன தனத்த தந்தன தனத்ததந்தன தனத்ததனதான

பாடல் வரிகள்

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்தகொஞ்சுகிளி யொத்தமொழிமானார்

குங்கும பணிக்குள் வண்புழுகு விட்டகொந்தளகம் வைத்தமடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்துமங்கிநர கத்தில்மெலியாமல்

வண்கயிலை சுற்றி வந்திடு பதத்தைவந்தனைசெய் புத்திதருவாயே

பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்திபண்டுள தவத்திலருள்சேயே

பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்தபந்தணை நகர்க்குளுறைவோனே

சம்புநிழ லுக்குள் வந்தவ தரித்தசங்கரர்த மக்குமிறையோனே

சங்கணி கரத்த ரும்பர்பய முற்றசஞ்சல மறுத்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →