பாடல் 836
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
- தலம்
- திருக்குடவாயில்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனா தத்தன தனனா தத்தனதனனா தத்தனதனதான
பாடல் வரிகள்
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்அயலார் நத்திடுவிலைமாதர்
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிகளவரே வற்செய்துதமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிடமலமா யைக்குணமதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புதமதுமா லைப்பதமருள்வாயே
கயிலா யப்பதி யுடையா ருக்கொருபொருளே கட்டளையிடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழகதிர் வேல் விட்டிடுதிறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றியகுடவா யிற்பதியுறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தககுறையா மெய்த்தவர்பெருமாளே.
