பாடல் 832
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (10 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3தாந்த தந்தன தான தனத்தம்தனதான
பாடல் வரிகள்
ஓங்கு மைம்புல னோட நினைத்தின்பயர்வேனை
ஓம்பை றும்ப்ரண வாதி யுரைத்தெந்தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்குமரேசா
மூங்கி லம்புய வாச மனக்குஞ்சரிமானு
மூண்ட பைங்குற மாது மணக்குந்திருமார்பா
கங்கை யங்கறு பாசில் மனத்தன்பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்பெருமாளே.
