உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 82

பூரண வார கும்ப சீதப டீர கொங்கை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானன தான தந்த தானன தான தந்ததானன தான தந்த தானன தான தந்ததானன தான தந்த தானன தான தந்ததனதான

பாடல் வரிகள்

பூரண வார கும்ப சீதப டீர கொங்கைமாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்றுபோதவ மேயி ழந்து போனது மான மென்பதறியாத

பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்சபாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்துபோனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்துமயல்தீரக்

காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்துயானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்துகாலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டுவிழிபாயக்

காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்புகாயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்துகாணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்கஅருள்வாயே

ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்கஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்குமாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சுமுரவோனே

ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்றசூரனை மாள வென்று வானுல காளு மண்டரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்தமுருகேசா

வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டுவாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்தமாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன்மருகோனே

வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்துசூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்துவாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →