பாடல் 805
சோதி மந்திரம் போத கம்பரவு
- தலம்
- திருவம்பர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்தனந் தான தந்ததனதான தந்தனந் தான தந்ததனதான தந்தனந் தான தந்ததனதந்ததான
பாடல் வரிகள்
சோதி மந்திரம் போத கம்பரவுஞான கம்பரந் தேயி ருந்தவெளிதோட லர்ந்தபொன் பூவி ருந்தஇடமுங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகைசாதி விண்பறிந் தோடு கண்டர்மிகுதோத கம்பரிந் தாடு சிந்துபரிகந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழிகோல மண்டிநின் றாடி யின்பவகைவேணு மென்றுகண் சோர ஐம்புலனொடுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவிலோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுடவீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇடரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரமசோம மண்டலங் கூட வும்பதுமவாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிபடர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுதலான மண்டலந் தேடி யொன்றதொழுகான மண்டலஞ் சேட னங்கணயில்கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடியாகி விண்பறந் தோட மண்டியொருசூரி யன்திரண் டோட கண்டுநகைகொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமயலாடி இந்திரன் தேவர் வந்துதொழசோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர்தம்பிரானே.
