பாடல் 801
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
- தலம்
- கந்தன்குடி
- ராகம்
- ஸஹானா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர ஏகம் (3)தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தனதந்தந்தன தந்தந்தனதனதான
பாடல் வரிகள்
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களையென்றுந்துயர் பொன்றும்படியொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினையென்றும்படி பந்தங்கெடமயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசைமண்டும்படி நின்றுஞ்சுடரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்வண்டன்தமி யன்றன்பவம்ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடுதஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறுமணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதிசம்புந்தொழ நின்றுந்தினம்விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவிகண்டுய்ந்திட அன்றன்பொடுவருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனைகந்தன்குடி யின்தங்கியபெருமாளே.
