பாடல் 781
பாட கச்சிலம் போடு செச்சைமணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்தனந் தான தத்ததனதான தத்தனந் தான தத்ததனதான தத்தனந் தான தத்ததனதனதான
பாடல் வரிகள்
பாட கச்சிலம் போடு செச்சைமணிகோவெ னக்கலந் தாடு பொற்சரணர்பாவை சித்திரம் போல்வர் பட்டுடையினிடைநூலார்
பார பொற்றனங் கோபு ரச்சிகரமாமெ னப்படர்ந் தேம லிப்பரிதமாகு நற்கரும் போடு சர்க்கரையின்மொழிமாதர்
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொடாட ளிக்குலம் பாட நற்றெருவிலேகி புட்குலம் போல பற்பலசொலிசைபாடி
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்வாரு முற்பணந் தாரு மிட்டமெனஏணி வைத்துவந் தேற விட்டிடுவர்செயலாமோ
சேட னுக்கசண் டாள ரக்கர்குலமாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்சேர வற்றநின் றாட யிற்கரமிரறுதோள்மேல்
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடியோர்கள் கட்டியம் பாட எட்டரசர்சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவிபுகழ்வேலா
நாட கப்புனங் காவ லுற்றசுகமோக னத்திமென் தோளி சித்ரவளிநாய கிக்கிதம் பாடி நித்தமணிபுனைவோனே
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்நாய கிக்குநன் பாக ரக்கணியும்நாதர் மெச்சவந் தாடு முத்தமருள்பெருமாளே.
