பாடல் 747
சதுரத்தரை நோக்கிய பூவொடு
- தலம்
- திருவேட்களம்
- ராகம்
- பெஹாக்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)தனனத்தன தாத்தன தானனதனனத்தன தாத்தன தானனதனனத்தன தாத்தன தானனதனதான
பாடல் வரிகள்
சதுரத்தரை நோக்கிய பூவொடுகதிரொத்திட ஆக்கிய கோளகைதழையச்சிவ பாக்கிய நாடகஅநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவமலமற்றிட வாட்டிய ஆறிருசயிலக்குல மீட்டிய தோளொடுமுகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமுமயிலிற்புற நோக்கிய னாமெனகருணைக்கடல் காட்டிய கோலமும்அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடியவர்முத்தமி ழாற்புக வேபரகதிபெற்றிட நோக்கிய பார்வையுமறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதரநெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடிசிதறக்கட லார்ப்புற வேயயில்விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதியபதசத்தினி மூத்தவி நாயகிசெகமிப்படி தோற்றிய பார்வதியருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்விகடத்துற வாக்கிய மாதவன்விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன்மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடியகொடிகைக்கொடு கீர்த்தியு லாவியவிறல்மெய்த்திரு வேட்கள மேவியபெருமாளே.
