உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 746

மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தானன தானான தானனதனத்த தானன தானான தானனதனத்த தானன தானான தானனதந்ததான

பாடல் வரிகள்

மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மகநதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழிமணத்த வார்குழல் மாமாத ராரிருகொங்¨க்முழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்செருக்கி மேல்விழ நாடோறு மேமிகவடித்த தேன்மொழி வாயூற லேநுகர்பண்டநாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்படைக்குள் மேவிய சீராவொ டேகலைபணைத்த தோள்களொ டீராறு தோடுகள்தங்குகாதும்

பணக்க லாபமும் வேலொடு சேவலும்வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலைபடைத்த வாகையு நாடாது பாழில்மயங்கலாமோ

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படைநொறுக்கி மாவுயர் தேரோடு மேகரிகலக்கி யூர்பதி த¨முள வேவிடும்வஞ்சவேலா

களித்த பேய்கண மாகாளி கூளிகள்திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்கடித்த பூதமொ டேபாடி யாடுதல்கண்டவீரா

குதித்து வானர மேலேறு தாறுகள்குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்குலைக்கு மேல்விழ வேரேறு போகமும்வஞ்சிதோயுங்

குளத்தி லு¡றிய தேனூறல் மாதுகள்குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழுதம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →