பாடல் 741
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
- தலம்
- திருத்துறையூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத்தன தானத்தன தானத்தன தானத்தனதானத்தன தானத்தனதனதான
பாடல் வரிகள்
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்யாழ்வைத்திசை கூரக்குழலுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரையாசப்படு வார்பொட்டணிசசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரைகோவைக்கனி வாய்பற்கதிரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திரகோபச்செய லார்பித்தர்களுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்பூசைக்கியல் வாள்பத்தினிசிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்போகர்க்குப தேசித்தருள்குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிடசோர்விற்கதிர் வேல்விட்டருள்விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடுசோதித்துறை யூர்நத்தியபெருமாளே.
