பாடல் 734
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
- தலம்
- தேவனூர்
- ராகம்
- நாட்டகுறிஞ்சி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)தான தான தந்த தந்த, தான தான தந்த தந்ததான தான தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்ஆறு மாறு மஞ்சு மஞ்சும்அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்றஆரணாக மங்க டந்தகலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றியேது வேறி யம்ப லின்றியொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கியான வாவ டங்க என்றுபெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்கவாரி மேல்வெ குண்ட சண்டவிததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்துவால சோம னஞ்சு பொங்குபகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்தேசி காக டம்ப லங்கல்புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சுதேவ னூர்வி ளங்க வந்தபெருமாளே.
