பாடல் 720
மனைமாண்சுத ரான சுணங்கரு
- தலம்
- மதுராந்தகம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதாந்தன தானன தந்தனதனதாந்தன தானன தந்தனதனதாந்தன தானன தந்தனதந்ததான
பாடல் வரிகள்
மனைமாண்சுத ரான சுணங்கருமனம்வேந்திணை யான தனங்களுமடிவேன்றனை யீண அணங்குறுவம்பராதி
மயமாம்பல வான கணங்குலமெனப்ராந்தியும் யானென தென்றுறுவணவாம்பிர மாத குணங்குறியின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதிவிடஏன்றெனை மோன தடம்பரமிகுதாம்பதி காண கணங்கனவும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறுகடகாங்கர சோண வியம்பரஇடாமங்கன தாளரு ளும்படியென்றுதானோ
தனதாந்தன தான தனந்தனதெனதோங்கிட தோன துனங்கிடதனவாம்பர மான நடம்பயில்எம்பிரானார்
தமதாஞ்சுத தாபர சங்கமமெனவோம்புறு தாவன வம்படர்தகுதாம்பிர சேவித ரஞ்சிதவும்பர்வாழ்வே
முனவாம்பத மூடிக வந்தனமுயல்வான்பிடி மாடிமை யைங்கரர்முகதாம்பின மேவுறு சம்ப்ரமசங்கணாறு
முககாம்பிர மோடமர் சம்பனமதுராந்தக மாநக ரந்திகழ்முருகாந்திர மோடம ரும்பர்கள்தம்பிரானே.
