பாடல் 72
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- பாகேஸ்ரீ
- தாளம்
- மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
பாடல் 72 (திருச்செந்தூர்)தகதிமி-2, தகிட-1 1/2தனனாத் தனன தனனாத் தனனதனனாத் தனனதனதான
பாடல் வரிகள்
நிலையாப் பொருளை யுடலாக் கருதிநெடுநாட் பொழுதுமவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்நிறைவாய்ப் பொறிகள்தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகிமடுவேற் குரியநெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவுமலர்தாட் கமலமருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதிகுளமாய்ச் சுவறமுதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவுகொதிவேற் படையைவிடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமரஅழியாப் புநிதவடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிபஅடியார்க் கெளியபெருமாளே.
