உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 713

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2தனன தானன தானன தனன தானன தானனதனன தானன தானனதனதான

பாடல் வரிகள்

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவதிமிர மேயரி சூரியதிரிலோக

தினக ராசிவ காரண பனக பூஷண ஆரணசிவசு தாவரி நாரணன்மருகோனே

குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணிகுணக லாநிதி நாரணிதருகோவே

குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுரகுறவர் மாமக ளாசைகொள்மணியேசம்

பமர பாரப்ர பாருண படல தாரக மாசுகபசுர பாடன பாளிதபகளேச

பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்பரவு பாணித பாவலபரயோக

சமப ராமத சாதல சமய மாறிரு தேவதசமய நாயக மாமயில்முதுவீர

சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழுசமர மாபுரி மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →