பாடல் 7
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
அருக்கு மங்கையர் மலரடி வருடியெகருத்த றிந்துபின் அரைதனில் உடைதனைஅவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும்இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழஉதட்டை மென்றுபல் இடுகுறி களுமிடஅடிக்க ளந்தனில் மயில்குயில் புறவெனமிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகியசிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்உறக்கை யின்கனி நிகரென இலகியமுலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகுபெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வறஉழைத்தி டுங்கன கலவியை மகிழ்வதுதவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெறஉரைத்த சம்ப்ரம சரவண பவகுகஇதத்த இங்கிதம் இலகிய அறுமுகஎழில்வேளென்
றிலக்க ணங்களும் இயலிசை களுமிகவிரிக்கும் அம்பல மதுரித கவிதனைஇயற்று செந்தமிழ் விதமொடு புயமிசைபுனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுறநடித்த சங்கரர் வழிவழி அடியவர்திருக்கு ருந்தடி அருள்பெற அருளியகுருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடுகுருக்க ளின்திற மெனவரு பெரியவதிருப்ப ரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே.
